திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், கார்த்திகை தீபத்திருநாள் விழாவை முன்னிட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலையில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப்பெருமாள் கோவில்கள் உள்ளன. திருவண்ணாமலை தீபத்திருநாள் விழாவுக்கு அடுத்த நாள், கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று அர்த்தநாரீஸ்வரர் செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப்பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர், கோவில் பிரகாரத்தை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அர்த்தநாரீஸ்வரர் ஆதிகேசவப்பெருமாள் சுவாமிகள் சொக்கப்பனை இரவு, 7:00 மணி அளவில் கொளுத்தப்பட்டது. திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.