பதிவு செய்த நாள்
04
டிச
2017
12:12
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் சக்திவிநாயகர் கோவிலில், உலக நன்மை வேண்டி மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. பொத்தனூர், சக்திவிநாயகர் கோவிலில், நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற, திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 9:00 மணி முதல் மாலை, 6:30 மணி வரை விரதமிருந்து, திருவாசகத்தை சிவனடியார்கள் வாசிக்க, பக்தர்கள் வாசித்தனர். பின்னர், நால்வருக்கு தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மாலை, 108 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆங்கில மாதத்தின், முதல் ஞாயிறன்று திருவாசகம் முற்றோதுதல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, சக்திவிநாயகர் பிரதோஷ குழுவினர் செய்து வருகின்றனர்.