பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் நாளை(டிச.,5ல்) பராமரிப்பு பணிக்காக ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. பழநி மலைக்கோயிலுக்கு மூன்றுநிமிடங்களில் மேலே செல்லவும், கீழே இறங்கவும் தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 8.30 மணிவரை ரோப் கார் இயக்கப்படுகிறது. இது மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை(டிச.,5ல்) ஒருநாள் நிறுத்தப் படுகிறது. கம்பி வடக்கயிறு, உருளைகளில் கிரீஸ் போட்டும், சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப் படுகிறது. டிச.,6ல் வழக்கம் போல் ரோப்கார் இயக்கப்படும், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.