விருதுநகர்:விருதுநகர் பாண்டியன் நகர் துாய சவேரியார் ஆலயத்தில் திருவிழாவில் நேற்று தேர்ப்பவனி நடைபெற்றது. விழாவை நவ.24 ல் திருச்சி பிரான்சிஸ் சலேசியார் மறைபரப்பு சபை தென் கிழக்கு மாகாண தலைவர் இன்னாசிமுத்து, சவேரியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றி துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றன. ஒன்பதாம் நாளான டிசம்பர் 2 ல் விருதுநகர் மறைவட்ட அதிபர் பெனடிக்ட் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரையும் நடைபெற்றது. பத்தாம் நாளான நேற்று ஆடம்பர கூட்டு திருப்பலியும் , மறையுரையும் நடந்தன. அதை தொடர்ந்து துாய சவேரியார் , துாய லுார்து அன்னை , மிக்கேல் அதிதுாதர் ஆகிய ஆலயங்களில் தேர்பவனி நடைபெற்றது. அதன் பின் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. திருவிழா ஏற்பாடுகளை சவேரியார் நகர் பங்குத்தந்தை ஆரோக்கிய செல்வம் தலைமையில் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.