ஊட்டி:ஊட்டி காந்தள் குருசடி காலனியில் கொடுங்கலுார் பகவதி அம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று காலை, 9:00 மணிக்கு தீர்த்தகலசங்கள், முளைப்பாரிகை, கோபுர கலசம் நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் தேதி மகா கணபதி ேஹாமம், 6ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல், காலை, 11:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.