செஞ்சி : மேல்தாங்கல் திருவத்திமலை கோவிலில் பவுர்ணமி உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா, மேல்தாங்கல் திருவத்திமலை வெங்கடாஜலபதி கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு யாகம் மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது. அன்று காலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு கணபதி, மகாலட்சுமி, குபேர யாகமும், கலச நீர் கொண்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதிக்கு ஊஞ்சல் சேவையும், சிறப்பு பஜனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.