பதிவு செய்த நாள்
08
டிச
2017
12:12
புதுடில்லி: நாட்டின் முக்கிய நீர் நிலைகளில் கொண்டாடப்படும், கும்பமேளா திருவிழாவுக்கு, யுனெஸ்கோவின் பாரம்பரிய, கலாசாரஅங்கீகாரம் கிடைத்துள்ளது. வட மாநிலங்களில் உள்ள அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் நகரங்களில் உள்ள நதிக்கரையில், கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்று, நீர்நிலைகளில் புனித நீராடுவர். நீண்ட காலமாக நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு, சர்வதேச கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, யுனெஸ்கோ அங்கீ காரம் கிடைத்துள்ளது. மனித குலத்தின் குறிப்பிடத்தக்க பாரம்பரிய கலாசார நிகழ்ச்சியாக, கும்பமேளாவை, யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய கலாசார அமைச்சர்மகேஷ் சர்மா, கும்பமேளா திருவிழாவுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததில்பெருமகிழ்ச்சி அடைகிறேன், என, தெரிவித்து உள்ளார்.