திட்டக்குடி: உலக அமைதி வேண்டி கார்த்திகை பெண்கள் பிரகார குழு சார்பில் திட்டக்குடி அசனாம்பிகை சமேத வைத்தியநாத சுவாமிக்கு மகாபிஷேகம் மற்றும் கலசாபிஷேக பெருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அனைத்து விக்ரகங்களுக்கும் சர்வ அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை வைத்தியநாத சுவாமிக்கும், அசனாம்பிகை அம்மனுக்கும் விசேஷ திரவிய மஹாபிஷேகம் நடந்தது. மாலை வைத்தியநாத சுவாமிக்கு பஞ்சமுகார்ச்சனை, அசனாம்பிகை அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனை நடந்து. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.