பதிவு செய்த நாள்
08
டிச
2017
01:12
செஞ்சி: செத்தவரை சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில், சனி பகவான் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செத்தவரை–நல்லாண்பிள்ளை பெற்றாள் சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில், யோக சர்வேஸ்வர சனி பகவானுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு, திருக்குடங்கள் வேள்வி சாலையில் இருந்து புறப்பாடாகி, 10:15 மணிக்கு, சிவஜோதி மோன சித்தர், யோக சர்வேஸ்வர சனி பகவான் கோவிலுக்கு திருக்குட நன்னீராட்டு செய்து வைத்தார். தொடர்ந்து 11:00 மணிக்கு, தச தரிசன வழிபாடும், சிவஜோதி மோன சித்தர் அருளாசியும் நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை உட்பட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, சிவஜோதி மோன சித்தர் தர்ம பரிபாலன ஆசிரம டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.