பதிவு செய்த நாள்
09
டிச
2017
12:12
ஊட்டி;ஊட்டி அடுத்துள்ள காந்தளில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. நடப்பாண்டு நிகழ்ச்சியையொட்டி, 10ம் தேதி, கால பைரவா அஷ்டமி மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது. அதில், விக்னேஷ்வர பூஜை, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, சனிபெயர்ச்சி பெருவிழா, ஹனுமந்த் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருக்கல்யாண உற்சவம், திருவிளக்கு பூஜை, மஹா சிவராத்திரி, அமாவாசை என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை காசி விஸ்வநாத அறங்காவலர் குழு, சேவா சங்கம், ஆலய முன்னேற்ற சங்கம், மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.