ஈரோடு: ஈரோடு ஹரிஹர சுதன் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில், நேற்று மாலை, திருவிளக்கு ஊர்வலம் நடந்தது. ஈரோடு வ.உ.சி., பூங்கா ஆஞ்சநேயர் கோவிலில் தொடங்கிய ஊர்வலம் மூலப்பட்டறை, கே.என்.கே.ரோடு, சின்ன மாரியம்மன் கோவில் வீதி வழியாக, கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் திடலில் முடிந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள், உள்பட பலர், கைகளில் விளக்குளை ஏந்தி வந்தனர். ஊர்வலத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி, பவனி வந்தார்.