பதிவு செய்த நாள்
13
டிச
2017
12:12
காஞ்சிபுரம்: சனி பெயர்ச்சி விழாவையொட்டி, திருநள்ளாறுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என, போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், 19ம் தேதி, சனி பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து பேருந்து இயக்கப்படுகிறது. காஞ்சிபுரம், கோயம்பேடு, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் இருந்து, 17 முதல், 20ம் தேதி வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.