Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிறந்தது மார்கழி: வாசலில் ... அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு செங்கோட்டை, தென்காசியில் வரவேற்பு அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி வழிபடும் முறையும் பலனும்!
எழுத்தின் அளவு:
அனுமன் ஜெயந்தி வழிபடும் முறையும் பலனும்!

பதிவு செய்த நாள்

16 டிச
2017
09:12

ஆஞ்சநேயர், சிவபெருமானின் அம்சம் ஆவார். சூரிய குமாரனான சனியோ, சிவபெருமானிடம் சனீஸ்வரன் என்று ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர். ஆஞ்சநேயர் மார்கழி நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் சனிபகவான் 7 1/2 ஆண்டு காலம் அவரைப் பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஒரு முறை ஆஞ்சநேயர் தனது மாளிகையின் வெளிப்புறம் தனது வாலை நீட்டியபோது, சனிபகவான் இது தான் சமயம் என்று ஆஞ்சநேயர் வாலைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது ஆஞ்சநேயர் என் ராம ஜபத்துக்கும், பூஜைக்கும் உங்களால் ஊறு வரலாமா? என்னை விட்டு விடுங்கள் என்றார்.

அதற்கு சனி பகவான் நான் அந்த சர்வேஸ்வரனையே பிடித்துள்ளேன் என்றார். உடனே ஆஞ்சநேயர் ஆனந்தம் தாங்காமல் வாலை சுழற்றி, சுழற்றி துள்ளிக்குதித்து ராமநாம சங்கீர்த்தனத்தை பாடிக்கொண்டு, ஆடத்தொடங்கினார். வாலின் நுனியில் அமர்ந்திருந்த சனிபகவான் மிகுந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவர் ஆஞ்சநேயரிடம், நீ எப்போது துள்ளிக்குதிப்பதை நீ என்னை பிடிப்பதாக கூறிய ஏழரை ஆண்டுகாலம் குதித்துக் கொண்டே இருப்பேன் என்றார். இதனால் அதிர்ந்து போன சனிபகவான் தமக்குள் ஓர் முடிவிற்கு வந்து, ஏழரை ஆண்டுகள் நான் பிடிப்பேன் என்று ஆஞ்சநேயர் பயந்ததே, நான் அவரை ஏழரை ஆண்டுகள் அவரைப் பிடித்ததற்குச் சமம்! என்று எண்ணியவராய் ஆஞ்சநேயர் வாலை விட்டு கீழே இறங்கினார் சனிபகவான்! உடனே ஆஞ்சநேயர் உள்ளிருந்த படியே, ச்ருதகர்மா! எம்மைத் துதிப்போர்களை நீ எந்த வகையிலும் துன்புறுத்தலாகாது. அவர்களுக்கு நல்ல மேன்மைகளையும் சந்தோஷத்தையும் அளிக்க வேண்டும்! அப்படியே ஆகட்டும் ஆஞ்சநேயா! என்றார் சனிபகவான்! எல்லா சிவன் கோவில்களிலும் சனிபகவான் சன்னதி எதிரில் ஆஞ்சநேயர் சன்னதியைக் காணலாம். ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். தம்மால் அவர்கட்கு எவ்வித கஷ்டமும் நேராமல் அருள் புரிவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar