நவகையிலாய கோயில்களுக்கு நெல்லையில் இருந்து சிறப்பு பஸ்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2011 11:12
திருநெல்வேலி : நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவகைலாய கோயில்களுக்கு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாண்மை இயக்குநர் பால்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, மணத்தி(குட்டித் தோட்டம்) மற்றும் சேர்ந்தபூமங்கலம்(புன்னக்காயல்) பகுதியில் உள்ள நவகைலாய கோயில்களுக்கு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளான வரும் 18, 25ம்தேதிகளிலும், வரும் ஜனவரி 1 மற்றும் 8ம்தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் மேற்கண்ட 4நாட்களிலும் காலை 7 மணிக்கு நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு நவகைலாய கோயில்களுக்கு சென்று இரவுக்குள் நெல்லை வந்து சேரும். இதற்கான பயணத்திற்கு நபருக்கு ஒன்றுக்கு 300 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவகைலாய கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் செல்ல விரும்புபவர்கள் நெல்லை புதுபஸ் ஸ்டாண்ட் மற்றும் தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பால்ராஜ் அறிக்கையில் கூறியுள்ளார்.