திருச்செந்தூர் கோயில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு பயணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2011 11:12
திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோயில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கு பெறுவதற்காக லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டம் முதுமலையிலுள்ள தெப்பக்காடு விலங்குகள் சரணாலயத்தில் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாட்கள் நடக்க இருக்கிறது. முகாமில் கலந்து கொள்வதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான யானைகளான தெய்வானை(13) மற்றும் குமரன்(9) ஆகியவை காலையில் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக யானை கட்டும் இடத்தில் வைத்து மலையாளம் கிருஷ்ணமூர்த்தி யானைகளுக்கு கஜ பூஜை செய்தார். தொடர்ந்து கோயி ல் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் பச்சைக் கொடியசைத்து முகாமிற்கு யானைகளை வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் உத வி ஆணையர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் செல்வகுமாரி, வெங்கடேசன், திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு, கவுன்சிலர் வடிவேல், ரமணி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு கடந்த 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை முதுமலையில் யானைகள் சிறப்பு முகாம் நடந்தது. இக்கோயில் யானைகள் இந்த ஆண்டு தான் புதியதாக முகாமிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.