பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, 35 ஆயிரம் வடை மாலை அலங்காரத்தில், திருப்பந்தியூர் பஞ்சமுக ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ள, விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா, நேற்று நடந்தது.முன்னதாக, காலை, 5:00 மணிக்கு, மங்கள இசையுடன், அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. பின், காலை, 5:30 மணிக்கு, ஆஞ்சநேய ருக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து, லட்சுமி குபேரருக்கும், திருமஞ்சனம் நடந்தது.
காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி - பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு, ஊஞ்சல் சேவையும் நடந்தது. அதன்பின், பஞ்சமுக ஆஞ்சநேயர், 35 ஆயிரம் வடைமாலை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், திருப்பந்தியூர், திருமணிக்குப்பம், சுங்கு வார்சத்திரம் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங் களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், ஜன., 1ம் தேதி முதல், இந்த கோவிலில், தினமும், 50 நபர்களுக்கு, அன்னதானம் நடைபெறவுள்ளது.