மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் அமாவாசை வழிபாடு நடந்தது. மயிலம் அடுத்த மோழியனுார் அக்கரைகாளியம்மன் கோவிலில், நேற்று மார்கழி அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு காலை 8:00 மணிக்கு அபிஷேகம்,வழிபாடு நடந்தது. பிற்பகல் 12.௦௦ மணிக்கு மகா தீபாரதனை நடந்து. மாலை 6:00 மணிக்கு மழை வேண்டி கூட்டு வழிபாடு செய்தனர். இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல், தென்பசியார் பெரியபாளை யத்தம்மனுக்கும், கொல்லியங்குணம், கூட்டேரிப்பட்டு காளி கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடந்தது.