பதிவு செய்த நாள்
19
டிச
2017
12:12
உடுமலை;உடுமலை, சுற்றுப்பகுதியில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாய் நடந்தது.மார்கழி அமாவாசையில், அனுமன் பிறந்த நாளாய் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனால், அனுமன் ஜெயந்தி பெருமாள் கோவில்களிலும் கோலாகலமாய் கொண்டாடப்படுகிறது. ஜெயந்தி விழாவையொட்டி, கோவில்களில், அனுமந்த சுவாமிக்கு, தயிர், பால், வெண்ணை, மஞ்சள், சந்தனம், பன்னீர் அபிேஷகம் நடந்தது. காலை முதல், சங்கல்பம், ஆவாஹனபூஜை, ேஹாமம் மற்றும் அலங்காரம் நடந்தது.உடுமலை, சுற்றுப்பகுதியில், நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில், குட்டை விநாயகர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.