பதிவு செய்த நாள்
19
டிச
2017
04:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன்கோவில்களில் சனிப்பெயர்ச்சி வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் 17ம் தேதி முதல் 19ம் தேதி காலை வரை கலச ஆவாஹன பூஜை, யாகங்கள் நடந்தது.
காலை 10:01 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிய சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜைகள் செய்தனர். பரிகார அர்ச்சனைகள் நடந்தது. அம்பிகேஸ்வர குருக்கள் பூஜைகளை செய்து வைத்தார். மேலும் ஏமப்பேர் விஸ்வநாதர், கள்ளக்குறிச்சி கங்கையம்மன் கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, பழைய மாரியம்மன், கமலா நேரு தெரு, நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், செம்பொற்சோதிநாதர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், தென்கீரனூர், முடியனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர் கோவில்களில் சனிப்பெயர்ச்சி வைபவம் நடந்தது.