செஞ்சி: செத்தவரை ஸ்ரீசிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள சனி பகவான் கோவில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செத்தவரை–நல்லாண்பிள்ளை பெற்றாள் ஸ்ரீசிவ ஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீயோக சர்வேஸ்வர சனி பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. 18 ம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீசிவ ஜோதி மோன சித்தர் தலைமையில் சிறப்பு ஹோமம், தம்பதியர் சங்கல்பம் நடந்தது. இரவு 7 மணிக்கு சிறப்பு பட்டி மன்றம் நடந்தது. இன்று காலை காலை 6 மணிக்கு சிறப்பு ஹோமமும், 8 மணிக்கு சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், 9.59 மணிக்கு ஸ்ரீசிவ ஜோதி மோன சித்தர் தலைமையில் மகா தீபாராதனையும் நடந்தது. அனைத்து ராசிதாரர்களுக்கும் சிறப்பு அர்ச்சனையும், ஸ்ரீசிவ ஜோதி மோனசித்தர் அருளாசியும், தொடர் அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.