கோவை; சனீஸ்வரர், நேற்று காலை 9:57 மணிக்கு, விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இந்த சனிப்பெயர்ச்சி நிகழ்வை ஒட்டி, சரவணம்பட்டியிலுள்ள சிரவணபுரம் கெளமார மடாலயத்தில், தனிக்கோவில் கொண்டுள்ள, சனீஸ்வரர் சன்னிதியில், சனிப்பெயர்ச்சி விழா நேற்று முன் தினம் துவங்கியது. மகாகணபதி வேள்வியுடன் துவங்கிய நகக்கிரஹவேள்வி இரண்டு நாட்களாக தொடர்ந்தது. நேற்றுகாலை 6:00 மணிக்கு, புனித தீர்த்தங்களை கோவில் வளாகத்திலுள்ள திருக்குளத்திலுள்ள கங்கையில் விடப்பட்டது. கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பக்தர்கள் அதில் நீராடினர். கோவை, மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சனீஸ்வரருக் எள்முடிப்பு கொண்ட மாலை, உளுந்து எள் கலந்த வடை சமர்பித்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.