பதிவு செய்த நாள்
20
டிச
2017
12:12
அன்னுார்;புளியம்பட்டியில், சித்தி விநாயகர், ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இங்கு சபரிமலையில் உள்ளது போல், 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஒரு நாள் மட்டும் படிகள் திறக்கப்படுகின்றன. டிச., 17 ம்தேதி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, ஐயப்பனுக்கு அபிேஷக ஆராதனையும்; 108 சங்காபிேஷகம் நடந்தது. காலை, 6:30 மணிக்கு படி திறக்கப்பட்டது. சுவாமியே சரணம் ஐயப்பா என்னும் கோஷத்துடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள், 18ம் படி வழியே சென்று, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பனை தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, ஹரிவராசனம் பாடலுடன் நடை அடைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.