பதிவு செய்த நாள்
21
டிச
2017
12:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று வந்த, தமிழக கவர்னர் புரோஹித், பக்தர்கள், வெளிநாட்டினரிடம் குறைகள் கேட்டார். கோவிலுக்கு காலை, 9:15 மணிக்கு கவர்னர் வந்தார். கோவில் இணை கமிஷனர் நடராஜன் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றார். அம்மன் சன்னதி, சுவாமி சன்னதியில் வழிபாடு நடத்தினார். கவர்னருக்கு பரிவட்டம், மாலை அணிவிக்கப்பட்டது. சுழலும் லிங்கம், பொற்றாமரைக்குளம், கலை நயமிக்க சிலைகளை பார்வையிட்டார். பொற்றாமரைக்குளத்தில் பக்தர்கள், வெளிநாட்டினரிடம் கோவில் பற்றி குறைகள் ஏதும் உண்டா, எனக் கேட்டார். அதற்கு, கோவில் வளாகம் துாய்மையாக பராமரிக்கப்படுவதாக பக்தர்கள் கூறினர். தரிசனம் முடிந்து காலை, 10:10 மணிக்கு புறப்பட்டு சென்றார். கலெக்டர் வீரராகவ ராவ் உடனிருந்தார்.