பதிவு செய்த நாள்
21
டிச
2017
01:12
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பகல்பத்து உற்சவம், துவங்கியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், மார்கழி மாதத்தில், பகல்பத்து உற்சவம், 10 நாட்களும், அத்யயன உற்சவம், 10 நாட்களும் நடப்பது வழக்கம்.நடப்பாண்டு, பகல் பத்து உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. உற்சவத்தையொட்டி மூலவர் சன்னிதி எதிரே உள்ள, மண்டபத்தில் ஆழ்வார்கள் எழுந்தருளினர். வேதபிரபந்த சாற்றுமறை மற்றும் ஆராதனங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பகல் பத்து உற்சவம், டிச., 28ல் நிறைவு பெற்றவுடன், மறுநாள் வைகுண்ட ஏகாதசியன்று, அத்யயன உற்சவம் துவங்குகிறது.