பதிவு செய்த நாள்
23
டிச
2017
12:12
கரூர்: கரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 31வது ஆண்டு விழாவையொட்டி, சீதா கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில், இன்று மாலை, 6:00 மணிக்கு சீதா கல்யாண உற்சவம், நாளை மாலை, 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும், 25 காலை, 7:00 மணிக்கு, ஹோமம், இரவு, வீரமணிதாசனின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடக்கிறது. வரும், 26 காலை, அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தக் குட ஊர்வலம், சுவாமிக்கு ஏகதின லட்ச்சார்ச்சனை நடக்கிறது. மதியம் அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடக்கிறது. ஆன்மிக தர்மத்தை கடைப்பிடிப்பது, அந்தக் காலமா, இந்தக் காலமா என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடைபெறும்.