பதிவு செய்த நாள்
25
டிச
2017
01:12
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில், சுப்பையா சுவாமியின், 58வது குரு பூஜை விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. தொண்டை மண்டல சிவாலயங்களில் முக்கிய தலமாக விளங்கும் இக்கோவில், நான்கு வேதங்களாலும், சமயகுரவர்கள் நால்வராலும் பாடல்பெற்ற தலம்.மலை மீது, 500 அடி உயரத்தில் அமைந்துள்ள, வேதகிரீஸ்வரரை சித்தர்கள் வழிபாடு நடத்தி, ஆன்மிக பணியில் ஈடுபட்டு உள்ளனர்.அந்த வகையில், இப்பகுதியில் கடும் விரதம் மேற்கொண்டு, சைவ நெறிமுறைகளை பரப்பியஒருவராக, சுப்பையாசுவாமிகள் இருந்துள்ளார்.கடந்த, 48 ஆண்டுகளுக்கு முன், வழிபாடு செய்யும் போது, சித்தி அடைந்தார். தொடர்ந்து ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் உற்சவம் தொடங்கும் நாளில், அவரது குருபூஜை விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு அவரது, 58வது குருபூஜை விழா நேற்று நடந்தது. இதை ஒட்டி, காலை, 5:30 மணிக்கு, சுவாமிக்கு நன்னீராட்டுதலும், தீபாராதனையும் நடந்தது.தொடர்ந்து, அருட்பெருஞ்ஜோதிஅகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றுதல், சொற்பொழிவு, ஜோதி வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.