உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம் காப்புக்கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2017 01:12
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று இரவு 7:15 மணிக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 2018 ஜன., 1 திங்கள்கிழமை புத்தாண்டு தினத்தன்று காலை 9:30 மணியளவில் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படி களையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசனத்தன்று காலை 11:00 மணியளவில் மரகதநடராஜருக்கு 18 வகையான அபிஷேக, ராதனை நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்பட்டும். பின்னர் இரவு 10:30 மணியளவில் ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தளுருவார்.