பதிவு செய்த நாள்
25
டிச
2017
01:12
கரூர்: ஐயப்பன் சேவா சங்கம் ஆண்டு விழா முன்னிட்டு, சீதா கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. கரூர், பசுபதீஸ்வரா ஐயப்பன் சேவா சங்கத்தின், 31வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில், அனுமன் ஜெயந்தி விழா, பிரம்ம காயத்ரி ஹோமம் நடந்தது. இதைத்தொடர்ந்து, சீதா கல்யாண உற்சவம் திவ்ய நாமாவளியுடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை சீதா கல்யாண மாப்பிள்ளை அழைப்பு, காசியாத்திரை, சீர் கொண்டு வருதல், கன்னிகாதானம் என, வரிசையாக திருமண விஷேசங்கள் நடந்தன. திருக்கல்யாணத்துக்குப் பின், ராமர் சீதா நாமாவளி பஜனைகள் நடந்தன. பின் சீதா கன்னிகாதானம் செய்த தேங்காய் ஏலம் விடப்பட்டு, 8,000 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பின் கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.