பதிவு செய்த நாள்
25
டிச
2017
01:12
கரூர்: பிரம்ம குமாரிகள் இயக்கத்தின், 80வது ஆண்டு விழா, கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில், 80க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்பத்துடன் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, குட் பை டென்சன் என்ற தலைப்பில் சொற்பொழிவு, பெண்களின் ஆன்மிக வல்லமை என்ற, பெயரில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இயக்க மூத்த நிர்வாகி கலாவதி, மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா, கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாரதா, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, ஊடக ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் உள்பட, பலர் விழாவில் பங்கேற்றனர்.