பதிவு செய்த நாள்
26
டிச
2017
01:12
பல்லடம்;பல்லடம் சந்தை பேட்டை ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில், ஐயப்பனுக்கு சங்காபிஷேகத்துடன் மண்டல பூஜை நடைபெற்றது.கோவிலில், அதிகாலை, 4.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வழிபாடு துவங்கியது. சங்காபிஷேகம் மற்றும் பால், தயிர், இளநீர் உட்பட பல திரவியங்களால், ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு, அபிஷேக பூஜைகள் நடந்தன. பல்வேறு வண்ண மலர்களால், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின், சென்டை மேளம் முழங்க, என்.ஜி.ஆர்.,ரோடு, மங்கலம் ரோடு, மற்றும் கடைவீதி வழியாக, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பல்லடம் பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.