பதிவு செய்த நாள்
26
டிச
2017
01:12
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, கெங்கையம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில், 300 ஆண்டுகள் பழமையான கெங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, மார்கழி மாத தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷக அலங்காரம், புதிய கவசம் அணிவித்தல், பொங்கல் வைத்தல், கலச ஊர்வலம், கூழ் வார்த்தல் நடந்தது. தொடர்ந்து தேர்த்திருவிழா நடந்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.