உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் டிச., 29 வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.இதையொட்டி அன்று காலை 5.00 மணிக்கு சிறப்பு வழி பாடுகள் துவங்குகின்றன. காலை 6.00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, காலை 9.00 மணிக்கு கோயிலுக்கே உரித்தான கம்பத்தடி அபிஷேகமும் நடக்கிறது.
இரவு 12.00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் வீதிவுலா வந்து அருள்பாலிக்கிறார். ஆருத்ரா தரிசனம் ஆனையூரில் பழமை வாய்ந்த மீனாட்சி அம்மன் சமேத ஐராவதேஷ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள நடராஜர் சிவகாமி அம்மனுக்கு 2018 ஜன., 1 இரவு ஆருத்ரா அபிஷேகமும், 2 ல் காலை ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
ஏற்பாடுகளை உதவி கமிஷனர் இளையராஜா, நிர்வாக அலுவலர் லதா மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.