பதிவு செய்த நாள்
27
டிச
2017
11:12
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம், காட்டூர் ஐயப்பன் கோவிலில், சண்டி ஹோமம் நடந்தது. ஐயப்பன் கோவிலில், 57ம் ஆண்டு பூஜா வைபவ விழா டிச., 22ம் தேதி,
துவங்கியது. ஜன., 1ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில், செவ்வாய்கிழமை நான்கு வேதங் களுடன் வேதபாராயணம், சண்டி ஹோமம் நடந்தது. புதன்கிழமை காலை, 6:30 மணிக்கு, ருத்ர ஜெப ஹோமம், 28ம் தேதி மஹாசுதர்சனயக்ஞம், 30 ல் ஹரிஹரபுத்ர சஹஸ்ரநாம லட்சார்ச் சனையும், 31ம் தேதி பாராயணமும், ஐயப்பன் பஜனையுடன், சுவாமி ஊர்வலமும் நடக்கின்றன.