மானாமதுரை:மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை ஒட்டி காலையில் சுவாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், புஷ்பாஞ்சலியும் நடந்தது.மூலவர் சிலைக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புஅபிேஷகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு தீபஆராதனை நடத்தப்பட்டது.பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில்சுவாமி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாககோவில் முன்பாக மதியம் அன்னதானம் நடைபெற்றது.