பதிவு செய்த நாள்
28
டிச
2017
12:12
மாமல்லபுரம் : மாமல்லபுரம் திருக்குளத்தில் நீராட, நுழைவாயில் திறக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு வீற்றுள்ள இறைவன், கடல் நீரை கைகளால் இறைத்து, புண்டரீக முனிவருக்கு காட்சியளித்தது சிறப்பு. கோவிலின், புண்டரீக புஷ்கரணி என்ற திருக்குளம், கடற்கரை சாலை பகுதியில் அமைந்து, பக்தர்கள், கடலில் நீராடியே, இறைவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். தற்போது, மேல்மருவத்துார், ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டிற்கு வரும், பிற மாநில பக்தர்கள், இப்பகுதி கடலில் நீராடியே, கோவிலுக்கு செல்கின்றனர். கடலில் நீராடியதும், உடலில் படிந்த உப்பு நீங்க, குளத்திலும் நீராட விரும்பும் நிலையில், அதன் நுழைவாயில் மூடப்பட்டே உள்ளது. பக்தர்கள், குளத்திற்கு செல்ல இயலாமல், அருகாமை தனியார் குளியலறையில், அதிக கட்டணத்தில் நீராடி அவதிப்படுகின்றனர். பக்தர் நலன் கருதி, கோவில் நிர்வாகம், திருக்குள நுழைவாயிலை திறக்க வலியுறுத்துகின்றனர்.