பதிவு செய்த நாள்
17
டிச
2011
03:12
லகை படைத்த கடவுள், அனைத்தையும் உருவாக்கிவிட்டு இறுதியாகத்தான் மனிதனை படைத்தார். இயற்கையோடு இணைந்து வாழும் வலிமை, அனைத்தையும் அடக்கி ஆளும் அதிகாரத்தை மனிதனுக்கு அளித்தார். இருப்பினும் "கீழ்ப்படியாமை என்ற பாவத்தை செய்ததால் ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமும், ஏவாளும் வெளியேற்றப்பட்டனர். அதுவரை பசி என்றால் என்னவென்று அறிந்திராத ஆதாமும், ஏவாளும் முதல்முறையாக தங்கள் உடல், உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை நடுங்குவதை உணர்ந்து பயத்தால் கதறி அழுதனர். இதுதான், "இறை குலத்தின் முதல் அழுகையாக வெளிப்படுத்தப்பட்டது. ஆதாம், ஏவாளுக்கு பின்னர் அடுத்தடுத்து தலைமுறைகள் தோன்றிக்கொண்டிருந்தாலும் இறை குலத்தில் மகிழ்ச்சி என்பது குறைவாகவே இருந்தது. தங்களை மகிழ்விக்க போகும் விடியலுக்காக காத்திருந்தனர். அந்த நாளும் விரைவிலேயே வந்தது. இடையர்களின் முன் தோன்றிய வானதூதர்கள், "உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கிறோம். உங்களின் மீட்பர் தாவீதின் ஊரில் பிறந்துள்ளார் என்றனர். நள்ளிரவிற்கு பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அன்றைய காலைப்பொழுது மகிழ்ச்சியின் பிறப்பிடமாக மாறியது.
சிறிது காலத்திற்கு பின் இந்த நிலையும் மாறியது. சிலு வையை சுமந்து கொண்டு கல்வாரி மலையின் உச்சியை நோக்கி இயேசு, தனது கடைசி பயணத்தை துவக்கியபோது இடைவழியில் கால்இடறி குப்புற விழுந்தார். அவரது துயரத்தை காணசகிக்காத பெண்கள் கதறி அழுதனர். அவர்களிடம் இயேசு, "ஜெருசலேம் பெண்களே, எனக்காக அழ வேண்டாம்! உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார். சிலுவை சாவைக்கண்டு அஞ்சி நடுங்கிப்போய் தங்கள் அறைக்குள் அடைந்து கிடந்த சீடர்கள் முன் இயேசு காட்சியளித்தார். உயிர்த்தெழுந்த அவரைக் கண்டு மகிழ்ந்த சீடர்கள், இயேசுவின் பணியை தொடருவோம் என்று உறுதிபூண்டனர். ""இன்பமும், துன்பமும் இரண்டற கலந்ததுதான் வாழ்க்கை என்பது இயேசுவின் மீட்பு வரலாற்றின்மூலம் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. மனதளவில் இதை ஏற்றுக்கொண்டு, சவால்களை சந்திக்க நாம் தயாராகி விட்டால் வாழ்க்கை எளிதாகிவிடும், என்கிறார் புனித அந்தோணியார்.