பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
குமாரபாளையம்: வைகுண்ட ஏகாதசி விழா, இன்று கொடியேற்றத்துடன் துவக்கப்பட உள்ளது. குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில், 90வது ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா, இன்று துவங்குகிறது. காலை, 5:30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றம், நகர்வல பஜனை ஊர்வலம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, தீபாராதனை நடக்கவுள்ளது. நாளை அதிகாலை, 5:00 மணியளவில், பரமபத வாசல் திறப்பு, 7:00 மணிக்கு தீபாராதனை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, பஜனை குழுவினரை கவுரப்படுத்தும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அதேபோல், அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில், நாளை அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5:00 மணியளவில் பரமபத வாசல் திறப்பு நடைபெற உள்ளது. காலை, 6:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மதியம், 12:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.