தியாகதுருகம் பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2017 02:12
தியாதுகதுருகம் : தியாகதுருகம் பெருமாள் கோவிலில், நாளை சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாள் கோவிலில் மார்கழிமாத உற்சவம் நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாளை சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடக்கிறது. அதிகாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகள் செய்யப்படுகிறது. தொடர்ந்து 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சர்வ அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். பின்னர் சுவாமி திருவீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான விழா குழுவினர் செய்துள்ளனர்.
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் உள்ள பழமையான அரங்கநாத பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, நாளை நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை 6:00 மணிக்கு, இன்னிசை கச்சேரி, ஆன்மீகசொற்பொழிவுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது. தொடர்ந்து நாளை அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சங்கராபுரம், திருக்கோவிலுார் பகுதிகளில் இருந்து திருவரங்கத்திற்கு செல்லும் வகையில், அரசு சார்பில் கூடுதல் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.