பதிவு செய்த நாள்
29
டிச
2017
02:12
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் தரிசனம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான ஆருத்ரா அபிஷேகம், ஜனவரி, 1 நள்ளிரவு முதல், மூலவருக்கு விபூதி, மஞ்சள், பன்னீர், இளநீர் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் நடக்க உள்ளது. 2 அதிகாலை, 4:30 மணிக்கு தில்லை கூத்தப்பெருமானுக்கு திருமுழுக்கு நடக்கிறது. 5:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, திருக்காட்சி தரிசனத்தை தொடர்ந்து, தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர், திருவெம்பாவை வழிபாடுகளுடன், மாணிக்கவாசகர் - சிவகாமியம்மை உடனமர் தில்லை அம்பலவாணர் மண்டபத்தில் எழுந்தருகிறார்.