பதிவு செய்த நாள்
30
டிச
2017
10:12
ஹர்தா: மத்திய பிரதேச மாநிலத்தில், கடும் குளிர் நிலவுவதால், மக்கள், ஸ்வெட்டர், கம்பளி போர்வையை பயன்படுத்துவதுடன், கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளுக்கும், கம்பளி போர்வை போர்த்தி வழிபடுகின்றனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த சில தினங்களாக, வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், மூடுபனி நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்வெட்டர், கம்பளி போர்வை இல்லாமல், மக்கள் வெளியில் வருவதில்லை. சமீபத்தில், ஹர்தா மாவட்டத்தில், பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை, 13 டிகிரி செல்ஷியசாகவும், இரவு நேர வெப்பநிலை, 9 டிகிரி செல்ஷியசாகவும் பதிவானது. இது மேலும் குறைந்து, குளிர் கடுமையாகும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கோவில்களுக்கு ஸ்வெட்டர், கம்பளி போர்வையுடன் பக்தர்கள் வரும் நிலையில், சுவாமி சிலைகளுக்கும், கம்பளி போர்வை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.