பதிவு செய்த நாள்
30
டிச
2017
10:12
பழநி: சபரிமலை சீசன், தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம், வின்ச், ரோப்கார், தங்கரதம் டிக்கெட் விற்பனை உள்ளிட்ட வசூல் தினமும், 50 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள ஆன்மிக தலமாக பழநி முருகன் மலைக்கோவில் உள்ளது. சாதாரண நாட்களில் மாத உண்டியல் வசூல், 1.5 கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. மேலும் ரோப்கார், வின்ச், தங்கரதம், பஞ்சாமிர்தம், அபிஷேகம், அர்ச்சனை, தரிசனம், தங்கத் தொட்டில் உள்ளிட்டவை மூலம் தினந்தோறும், 15 லட்சம் - 25லட்சம் ரூபாய் வரை சராசரியாக வசூலாகிறது. தற்போது, சபரிமலை அய்யப்ப பக்தர்கள், தைப்பூச பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், பழநி கோவிலுக்கு தினசரி, 40 லட்சம் - 50 லட்சத்திற்கும் மேல் வசூலாகிறது. குறிப்பாக பஞ்சாமிர்தம் விற்பனை மற்றும் தங்கரதம் இழுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.