பதிவு செய்த நாள்
30
டிச
2017
12:12
அவிநாசி:அவிநாசி அருகே முருகம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாகாளியம்மன்
கோவில் உள்ளது. கோவிலில், பொங்கல் விழா, வரும், 2ல் துவங்குகிறது. அன்றிரவு, 9:00
மணிக்கு, பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து, ஊர்வலம் நடக்கிறது. இரவு, 10:30 மணிக்கு, கிழக்கு பிள்ளையார் கோவிலிருந்து, கும்பம் அலங்கரித்து, அம்மன் கோவிலுக்கு எடுத்து வருதல், சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.
வரும், 3ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,
தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மெரமனை எடுத்தல், மாவிளக்கு , வான வேடிக்கை,
கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 4ம் தேதி, அதிகாலை, 4:00க்கு, பொங்கல் வைத்து, சுவாமி வழிபாடு, மாலை, 6:30க்கு, கும்பம் நதிக்கரைக்கு எடுத்து செல்லுதல், 5ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழாவுடன், பொங்கல் விழா நிறைவடைகிறது. விழா
ஏற்பாடுகளை, ஸ்ரீ மாகாளியம்மன் சேவா அறக்கட்டளை திருவிழா குழுவினர் மற்றும்
ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.