பதிவு செய்த நாள்
30
டிச
2017
12:12
திருப்பூர்: திருப்பூர், ஜெ.ஜெ., நகர், ராமாபுரத்தில், ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு
சார்பில், ஒன்பதாம் ஆண்டு மண்டல, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
காலை, 05:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கலசம் எடுத்து, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது.
மாலை, 5:00 மணிக்கு, 108 பெண்கள் பங்கேற்ற, திருவிளக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற கூட்டு பஜனை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில். சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதலும், மாலையில் சுவாமி ஐயப்பன், சிறப்பு அலங்காரத்தில் சென்டை மேளத்துடன் திருவீதிஉலா நிகழ்ச்சியும் நடக்கிறது.