பதிவு செய்த நாள்
30
டிச
2017
02:12
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் பரமபதவாசல் திறப்புநிகழ்ச்சி கோவிந்தா கோஷத்துடன் நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவம் நடந்து வரும் நிலையில், கடந்த பத்து நாட்களாக பகல் பத்து நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி டிச.28-ல் மாலை பெரு மாள் மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடப் பட்டது. பின்னர் 5:15 மணிக்கு பெருமாள் பச்சை பட்டுடுத்தி சங்கு, சக்கரம் ஏந்தி சர்வ அலங் காரத்துடன் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றல் நிகழ்ச்சிக்குப் பின் ஆடி வீதிகளில் வலம்வந்தார்.
காலை 6:00 மணிக்கு சவுந்தரவல்லித்தாயார் சன்னதியில் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தரு ளினார். அங்கு 11:00 மணி தொடங்கி சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு ராப்பத்து நிகழ்ச்சி துவங்கியது. இன்று காலை துவாதசியையொட்டி பெருமாள் கருடவாகனத்தில் காலை 10:00 மணிக்கு வீதியுலா வருவார்.
* மேலும் பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் சிறப்பு தீபாராதனை நிறைவு பெற்று காலை 6:00 மணிக்கு ராமர் கருடவாகனத்தில் பரமபதவாசல் வழியாக வந்தார்.
* எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயா ருடன்அருள்பாலித்தார். காலை திருப்பாவை பாடப்பட்டு, காலை 5:00 மணிக்கு மேல்பரமபத வாசலை கடந்து வந்தார். தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
*முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஆதங்கொத்தங்குடி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்புற அலங்காரம், அபிஷேகம், பிரார்த்தனை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் ஒருங்கிணைப்பாளர் குமார் செய்திருந்தார்.