பதிவு செய்த நாள்
19
டிச
2011
12:12
சபரிமலை: சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில்களை உடைக்க, நீலிமலையில் அமைக்கப்பட்ட இயந்திரத்தை, சபரிமலை முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சபரிமலையை பிளாஸ்டிக் இல்லாத இடமாக மாற்ற வேண்டும் என்ற முயற்சி, இன்னும் முயற்சியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக எவ்வளவு பிரசாரம் செய்தாலும், பிளாஸ்டிக் குவிவதில் எந்த குறைவும் ஏற்படவில்லை. குறிப்பாக, மலையேறும் பக்தர்கள் தண்ணீரை குடித்து விட்டு, பாட்டில்களை காட்டில் வீசிச் செல்கின்றனர். இதை தவிர்க்க, காட்டில் வீசப்படும் பாட்டில்களை சேகரிக்க, தேவசம்போர்டு இந்த ஆண்டு, கான்ட்ராக்டர்களை நியமித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, பிளாஸ்டிக் பாட்டில்களை உடைக்கும் இயந்திரம், நீலிமலையில் அமைக்கப்பட்டது. இந்த ஷட்டிங் இயந்திரம், ஒரு நாளில் இரண்டு டன் பாட்டில்களை உடைத்து விடும். இயந்திரத்தை இயக்கி வைத்த ஜெயக்குமார், "இதுபோல கூடுதல் இயந்திரங்கள் இயக்க, சபரிமலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.