நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மார்கழி மாதம், திருப்பாவை நோன்பு விரதம் மேற்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலையில் திருமலை தெப்பக் குளத்தில் நீராடிவிட்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மார்கழி மாத பனிப்பொழிவிலும், திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் குழுவினர், திருமலையின் நான்கு மாட வீதிகளிலும், திருப்பாவை பாசுரங்களை பாடிச் செல்வதை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளிக்கின்றனர்.