பதிவு செய்த நாள்
30
டிச
2017
05:12
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியையொட்டி,
சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கொட்டும் பனியிலும், பக்தர்கள், பக்தி பரவசத்துடன்
நீண்டவரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.
*108 திவ்யதேசம்: காஞ்சிபுரத்தில், 108 திவ்யதேசங்களில் ஒன்றான அஷ்டபுஜபெருமாள் கோவிலில், வெள்ளிக்கிழமை அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கரகோஷங்களுக்கிடையே, சொர்க்கவாசல் வழியாக, தேவியர்களுடன், உற்சவர் அஷ்டபுஜபெருமாள் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். ஊஞ்சல் சேவை நடந்தது. பின், பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று, மூலவர் அஷ்டபுஜ பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
* வைகுண்டர்: வைகுண்ட பெருமாள் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பின், சயன கோலத்தில் அருள்பாலித்த
பெருமாளை பக்தர்தர்கள் தரிசனம் செய்னர்.
இதை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.இரு கோவில்களிலும், கொட்டும் பனியிலும், பக்தர்கள் நீண்டவரி சையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
*வரதர்: வரதராஜ பெருமாள் கோவிலில், மூலவர் பெருமாள், தாயாருக்கு டிச28-ல், தசமி மாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து, விசேஷ பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, பெரு மாள் உற்சவருக்கு ரத்ன அங்கி சாற்றப்பட்டது.
மதியம், 1:00 மணிக்கு, பெருமாள் உற்சவர் ரத்ன அங்கியுடன், மூலவர் சன்னதியில் இருந்து இறங்கி, கண்ணாடி அறையில் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேகம் நடந்தது.
மாலை, பெருமாள் திருவடி கோவில் புறப்பாடு நடந்தது. திருமுற்றவெளி நான்கு கால் மண்டபம் மற்றும் கிளி மண்டபத்தில், வேதபிரபந்த சாற்றுமுறைகளுடன், முதல் நாள் அத்யயன உற்சவம் துவங்கியது.
*வீதியுலா: காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டை ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோ பாலன் கோவிலில், டிச. 28-ல்., இரவு, முழுவதும் ஹரிபஜனை, திவ்ய ப்ரபந்த, கீர்த்தனங்கள் இசைத்து பஜனை நடந்தது. வெள்ளக்கிழமை காலை, 5:00 மணிக்கு, கோவில் வாசலில் வேணுகோபாலன் சொர்க்கவாசல் காட்சி தந்து வீதியுலா வந்தார். அய்யன்பேட்டை வெங்க டேச பெருமாள் கோவிலில், வெள்ளிக்கிழமை காலை, 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக் கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பெருமாள் கருடவாகன த்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
* செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வெள்ளி க்கிழமை அதிகாலை, 4:00 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன்பின் தரிசனத் திற்காக காத்திருந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம், தென் திருப்பதி எனும் திருமலைவையாவூர், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாத சியையொட்டி, மூலவர் ரத்ன அங்கி சேவையிலும், உற்சவர் புஷ்பாங்கி
சேவையிலும் அருள் பாலித்தனர்.முன்னதாக அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்குஅனுமதிக்கப்பட்டனர்.
* மாமல்லபுரம்: வைணவ கோவில்கள், 108ல் ஒன்றாக விளங்கும் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், வெள்ளிக்கிழமை அதிகாலை, 4:00 மணிக்கு, மார்கழி மாத திருப்பாவை வழிபாடு நடந்தது.
அதைத்தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, மூலவர் ஸ்தலசயன பெருமாள், உற்சவர் உலகுய்ய நின்ற நாயனார், நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார், முத்தங்கி ஆடை அணிவித்து அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
உற்சவ சுவாமி, தேவியருடன், மகாமண்டபத்தில் எழுந்தருளி, வழிபாடு நடத்தப்பட்டு, காலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசலை கடந்தார். பக்தர்கள் சுவாமியை தரிசித்து, கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, வழிபட்டனர். சுவாமி வீதியுலா சென்று, மீண்டும் கோவிலை அடைந்து, கண்ணாடி அறையில் காட்சியளித்தார்.
* திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே நெரும்பூர், புலிக்குன்றம், பாண்டூர் உள்ளி ட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் நேற்று பூதேவி, ஸ்ரீதேவி கூடிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் நடந்தது.
பின், மலர் அலங்கார வழிபாடும், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்னையும் நடந்தது. பக்தர்களுக்கு மலர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் விடியற்காலை முதல் வழிபட்டனர்.
திருக்கழுக்குன்றம், காணக்கோவில்பேட்டை, பஜனை கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது.