பதிவு செய்த நாள்
30
டிச
2017
05:12
திருவண்ணாமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு விழா,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமை நடந்தது.
அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வேணுகோபால் சுவாமிக்கும், கஜலட்சுமி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, வெள்ளி கவச
அலங்காரத்தில் வேணுகோபால் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேணுகோபால்
சன்னதியில், பெரிய மடக்கில் தீபம் ஏற்றப்பட்டு, அதை கையில் ஏந்தியவாறு, சிவாச்சாரி யார்கள் எடுத்து சென்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
இதே போன்று, திருவண்ணாமலை மாட வீதி பூத நாராயணன் கோவில், காஞ்சி ரோட்டில் உள்ள பெருமாள் கோவில், ஆரணி கோதண்டராமர் சீனுவாச பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கண்ணமங்கலம் பெருமாள் கோவில், போளூர் சம்பத்கிரி நரசிம்மர் கோவில், படவேடு வேணுகோபாலசுவாமி கோவில், நெடுங்குணம் ராமசந்திர சீனுவாச பெருமாள் கோவில், வந்தவாசி தென்னாங்கூர் பெருமாள் கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.