பதிவு செய்த நாள்
02
ஜன
2018
01:01
மானாமதுரை : மானாமதுரை இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச்சில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலியும் ஆராதனை விழாவும் நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.மானாமதுரையில் உள்ள சி.எஸ்.ஐ., மற்றும் ஆர்.சி, சர்ச்களிலும் புத்தாண்டைஒட்டி சிறப்பு திருப்பலியும், ஆராதனையும் நடைபெற்றது.
*மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்,வீரஅழகர், தியாக விநோத பெருமாள் கோவில் உள்பட ஏராளமான கோயில்களிலும் அதிகாலையில் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது.
தேவகோட்டை: -தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், கோதண்டராமஸ்வாமி கோவில், ரங்கநாத பெருமாள் கோவில் , ஸ்ரீரடிசாய்பாபா கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும்மார்கழி திருப்பள்ளி எழுச்சி சிறப்பு அபிேஷகம்,சிறப்பு பூஜை செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பெற்றது. சிறப்பு பூஜைகள் நடந்தன. எல்லா கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிறிஸ்தவ கோவில்களில் சிறப்பு திருப்பலி: தேவகோட்டை சகாய அன்னை ஆலயத்தில் வட்டார அதிபர் பங்கு பாதிரியார் பாஸ்டின் தலைமையிலும் , ராம்நகர் உலகமீட்பர் ஆலயத்தில் பாதிரியார் ஜேசுவும்,கிறிஸ்து நாதர் ஆலயத்தில் பாஸ்டர் ஜென்சன் தலைமையிலும், கிறிஸ்துவ சபைகளிலும் 2017 க்கு விடை அனுப்பும் திருப்பலி, உரைகளும், அதனை தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் புதிய 2018 ஐ வரவேற்று சிறப்பு திருப்பலி பூஜையும், அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாதிரியார்கள் மறையுரை ஆற்றினார்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சர்ச்கள், கோயில்களில் 2018 புத்தாண்டு தின சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் நேற்றுமுன்தினம் இரவு 12:00 மணிக்கு புத்தாண்டு தின சிறப்பு திருப்பலி நடந்தது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். பங்கு பாதிரியார்கள் மரிய டெல்லஸ், ஆரோக்கியராஜா முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அதேபோல் சிவகங்கை விஸ்வநாதர் சுவாமி கோயில், பிள்ளைவயல் காளியம்மன் கோயில், விஷ்ணு துர்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
காளையார்கோவில்: சொர்ண காளீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புனித அருளானந்தர் சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு 11 :00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. காளையார்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புத்தாண்டை முன்னிட்டு கபடி. சிலம்பம், பந்து எறிதல், கோலம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.