உத்திரமேரூர்: திருமுக்கூடல், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி, நேற்று நாள் முழுவதும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் தொல்லியல் துறைக்கு சொந்தமான அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்தம் பெற்றதாக விளங்குகிறது.சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று புத்தாண்டையொட்டி, இக்கோவிலுக்கு வழிபட வந்திருந்தனர். அதிகாலை துவங்கிய தரிசன நிகழ்ச்சி, மாலை வரை நீடித்தது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில், சாலவாக்கம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.